< Back
உலக செய்திகள்
சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!
உலக செய்திகள்

சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

தினத்தந்தி
|
18 Jun 2022 4:22 PM GMT

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலவெயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே "சைக்கிளிங்" சென்றார். தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன் சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார்.

அப்போது, நிலை தடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும், உடனடியாக எழுந்த ஜோ பைடன் தான் நலமாக இருப்பதாக கூறினார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்த வித மருத்துவ கவனிப்பும் தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்