< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்து டிரைவர் படுகாயம்

13 May 2023 2:51 AM IST
இத்தாலியில் ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் கொண்டு சென்ற வேன் வெடித்ததில் டிரைவர் படுகாயமடைந்தார்.
ரோம்,
இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிசிச்சைக்கு தேவையான ஆக்சிஜனை ஒரு வேனில் கொண்டு சென்றனர். போர்டா ரோமானா என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்றவை தீப்பிடித்து எரிந்தன.
இது குறித்த தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் இருந்த பள்ளிக்கூடம், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் இந்த விபத்தில் வேன் டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.