< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, 19 பேர் படுகாயம்
உலக செய்திகள்

அமெரிக்கா: குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - இருவர் பலி, 19 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
8 July 2024 8:28 AM GMT

துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மிச்சிகன்,

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் மிச்சிகனில் டெட்ராய்ட் நகரின் குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் பற்றிய ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்