< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: மசோதா நிறைவேற்றம்

கோப்புப்படம்

உலக செய்திகள்

அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி: மசோதா நிறைவேற்றம்

தினத்தந்தி
|
8 Feb 2023 9:55 AM IST

அமெரிக்காவில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வாழும் அந்தந்த நாடுகளில் உள்ள விதிமுறைகளுக்குட்பட்டே தீபாவளியை கொண்டாட வேண்டிய சூழல் உள்ளது.

அந்த வகையில் பல நாடுகளில் தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தீபாவளிக்கு பொதுவிடுமுறை மற்றும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கும் மசோதா மாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் அந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் அனைவரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதனையொட்டிய காலத்தில் 5 நாட்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தீபாவளி பண்டிகை மாகாண பொதுவிடுமுறை பட்டியலுக்குள் கொண்டுவரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்