< Back
உலக செய்திகள்
உக்ரைனுக்கு ரூ.3,171 கோடி மதிப்பிலான ராணுவ உதவி: அமெரிக்கா
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ரூ.3,171 கோடி மதிப்பிலான ராணுவ உதவி: அமெரிக்கா

தினத்தந்தி
|
9 July 2022 10:34 PM IST

உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. போரில் உக்ரைனின் பல நகரங்கள் ரஷியாவிடம் வீழ்ந்தபோதும், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து ரஷிய படையை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ராணுவம், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,171 கோடி) மதிப்பில் ராணுவ உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பீரங்கி குண்டுகள், ராணுவ கவச வாகனங்கள் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் இந்த தொகுப்பில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்