< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மீது ஊழல் குற்றச்சாட்டு
|24 Sept 2023 4:08 AM IST
அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க செனட் சபையில் வெளியுறவு துறை பிரிவின் தலைவர் பதவியை வகித்தவர் ராபர்ட் மெனெண்டஸ். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் எகிப்து நாட்டிற்கு உதவும் வகையில் தனது செல்வாக்கை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு ஈடாக தங்கக்கட்டிகள், சொகுசு கார் போன்றவற்றை லஞ்சமாக பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து ராபர்ட், அவரது மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நியூஜெர்சி மாகாண கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே ராபர்ட் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் அவர் வெளியுறவு துறை பிரிவின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.