< Back
உலக செய்திகள்
#லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் - ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

தினத்தந்தி
|
27 Jun 2022 3:04 AM IST

ரஷிய தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜி-7 நாடுகள் மாநாட்டில் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.


Live Updates

  • 27 Jun 2022 5:38 PM IST

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:-

    குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார். ஜி7 மாநாட்டில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா கூறுகையில், ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

  • 27 Jun 2022 4:57 PM IST

    ’லிசிசான்ஸ்க்’ நகரில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்;மக்களுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

    உக்ரைன் மீது ரஷியா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை தாக்கி வரும் ரஷிய படைகள் தற்போது, உக்ரைனின் கிழக்கு நகரமான லிசிசான்ஸ்க் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதையடுத்து, லிசிசான்ஸ்க் நகரில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேறுமாறு லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். உயிருக்கும் உடல் நலனுக்கும் உண்மையான அச்சுறுத்தல் இருப்பதால், உடனடியாக அந்த நகரத்தை விட்டு வெளியேறுங்கள் என்று நான் கோரிக்கை வைக்கிறேன் என டெலிகிராம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

  • 27 Jun 2022 11:35 AM IST

    ரஷிய படையெடுப்பு; உக்ரைனின் பாதுகாப்புக்கு நவீன ஏவுகணையை வழங்க அமெரிக்கா முடிவு

    கீவ்,

    ரஷியாவின் 4 மாத கால படையெடுப்பில் உக்ரைனின் பாதுகாப்புக்கு உதவுவதற்காக தரையில் இருந்து வானில் சென்று தாக்கும் நவீன ஏவுகணையை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    அமெரிக்க அதிபர் பைடன், ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இதில், இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளும் கலந்து கொள்கின்றன. உக்ரைனுக்கு ஆதரவான சில விசயங்களை பைடன் வெளியிட கூடும் என கூறப்பட்டது.

    இந்நிலையில், உக்ரைனின் பாதுகாப்புக்கு உதவுவதற்காக தரையில் இருந்து வானில் சென்று தாக்கும் நவீன ஏவுகணையை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என நெருங்கிய வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

    நார்வே நாட்டில் உருவான, விமானங்களை அழிக்கும், நடுத்தர முதல் தொலைதூர தாக்குதலில் ஈடுபடும் ஏவுகணைகளை அமெரிக்கா வாங்கி வருகிறது. அவை, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் கேபிடால் கட்டிடம் ஆகியவற்றின் வான்வழி மேற்பரப்பு பாதுகாப்புக்கான பயன்பாட்டுக்காக உள்ளது.

    இந்நிலையில், இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் பைடன் முடிவு செய்து அதுபற்றிய அறிவிப்பினை வெளியிட உள்ளார். இதுதவிர, கூடுதலாக உக்ரைனிய ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள், ரேடார்கள் உள்ளிட்டவற்றை உதவியாக வழங்கவும் முடிவாகி உள்ளது என கூறப்படுகிறது.

  • 27 Jun 2022 10:40 AM IST

    பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற புகாரை ரஷியா மறுத்துள்ளது.

    முன்னதாக, வடக்கு மற்றும் மேற்கு உக்ரேனில் உள்ள மூன்று இராணுவ மையங்களுக்கு எதிராக தாக்குதல் நிறுத்தப்பட்டதாக அறிவித்தது. இதில் ஒன்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.

  • 27 Jun 2022 6:02 AM IST


    உக்ரைனின் இராணுவம் மைக்கோலைவ் மாகாணத்தில் இரண்டு ரஷிய வெடிமருந்து கிடங்குகளையும், கெர்சன் பிராந்தியத்தில் ஒன்றையும் அழித்ததாக கூறப்படுகிறது.

  • 27 Jun 2022 5:17 AM IST


    சுமி ஒப்லாஸ்ட் மீது ரஷியா 150 முறை துப்பாக்கிச்சூடு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது - கவர்னர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி

    யுனகிவ்கா, பிலோபிலியா, க்ராஸ்னோபிலியா மற்றும் ஷாலிஹைன் ஆகிய சமூகங்கள் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களால் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொருவர் காயமடைந்ததாகவும் சுமி ஒப்லாஸ்ட் கவர்னர் டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி தெரிவித்தார்.

  • 27 Jun 2022 4:10 AM IST

    கிரெம்ளினின் இராணுவ இலக்குகளை எதிர்க்க பெலாரஸ் மக்களுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு

    இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று பெலாரசியர்களுக்கு ஆற்றிய உரையில், கிரெம்ளின் ஏற்கனவே உங்களுக்காக எல்லாவற்றையும் தீர்மானித்துள்ளது, உங்கள் வாழ்க்கை அவர்களுக்கு மதிப்பற்றது. ஆனால் நீங்கள் அடிமைகளோ அல்லது பீரங்கிக்கு இரையோ அல்ல என்று அவர் தெரிவித்தார்.

  • 27 Jun 2022 3:05 AM IST


    உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளன. இந்தநிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 நாடுகள் மாநாடு, நேற்று ஜெர்மனியில் உள்ள எல்மாவில் தொடங்கியது. அதில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு சென்றுள்ளார்.

    அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அமெரிக்காவும், இதர ஜி-7 நாடுகளும் தடை விதிக்க உள்ளதாக கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.

    எரிசக்திக்கு அடுத்தபடியாக ரஷியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் பொருள் தங்கம் ஆகும். எனவே, அதற்கு தடை விதித்தால், ரஷியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்