< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்திக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
|10 April 2023 12:31 AM IST
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்,
அமெரிக்க அதிபர் பைடன் வருகின்ற செவ்வாய் கிழமை வடக்கு அயர்லாந்து செல்ல உள்ளார். அப்போது புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக வடக்கு அயர்லாந்து வந்திறங்கும் அமெரிக்க அதிபர் பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நேரில் சென்று வரவேற்க உள்ளார். இந்த நிகழ்வின் போது ஜோ பைடன் பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளதாகவும், வடக்கு அயர்லாந்தில் முதலீட்டை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.