< Back
பிற விளையாட்டு
ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி
பிற விளையாட்டு

ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி

தினத்தந்தி
|
8 Sep 2023 10:38 PM GMT

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது.

யோங்க் சாங், -

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் யோங்க் சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் மானவ் தாக்கர் 9-11, 10-12, 5-11 என்ற நேர்செட்டில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான மா லாங்கிடம் (சீனா) தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் 3-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சத்யன், சரத்கமல் ஆகியோரும் தோல்வியை தழுவினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அஹிகா முகர்ஜி 2-11, 6-11, 11-8, 11-9, 11-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சென் ஜிங்டோங்கிடம் (சீனா) போராடி வீழ்ந்தார். சுதிர்தா முகர்ஜி 9-11, 6-11, 4-11 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் ஓராவான் பரநாங்கிடம் பணிந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் மானவ் தாக்கர்-மனுஷ் ஷா ஜோடி 5-11, 3-11, 5-11 என்ற நேர்செட்டில் சீனாவின் பான் சென்டாங் இணையிடம் சரணடைந்தது. இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் அஹிகா முகர்ஜி-சுதிர்தா முகர்ஜி இணை 5-11, 11-13, 10-12 என்ற நேர்செட்டில் சீனாவின் வாங் மான்யு-சென் மெங் ஜோடியிடம் தோற்றது.

மேலும் செய்திகள்