< Back
உலக செய்திகள்
அமெரிக்கா; பொழுது போக்கு பூங்காவில் துப்பாகிச்சூடு: 10 பேர் காயம்
உலக செய்திகள்

அமெரிக்கா; பொழுது போக்கு பூங்காவில் துப்பாகிச்சூடு: 10 பேர் காயம்

தினத்தந்தி
|
16 Jun 2024 10:27 AM IST

அமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தைகள் பொழுது போக்கு வாட்டர் பார்க்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம் அடைந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஒக்லண்ட் கவுண்டியில் டெட்ராய்ட் என்ற பகுதி உள்ளது, குழந்தைகள் பொழுது போக்கு பூங்காவான ஒன்று உள்ளது. வாட்டர் பார்க் என்று அழைக்கப்படும் பூங்காவில் நீர் வீழ்ச்சி, நீர் சறுக்குகள் என குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க பல வசதிகள் உள்ளன. இங்கு விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் வருகை தருவார்கள்.

இந்த நிலையில், இந்த வாட்டர் பார்க்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8-வயது சிறுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அருகில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து மறைந்து கொண்டார். இதனால், அந்த வீட்டை சுற்றி வளைத்துள்ள போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 215 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்