< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிரியாவில் அமெரிக்கா வான்தாக்குதல் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்கள் 3 பேர் பலி
|8 Oct 2022 2:30 AM IST
சிரியாவின் பல்வேறு பகுதிகளில் ஐ. எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது.
டமாஸ்கஸ்,
சிரியாவின் பல்வேறு பகுதிகளில் ஐ. எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. அவர்களை ஒடுக்க அமெரிக்க படைகளின் உதவியுடன் சிரியா ராணுவம் போராடி வருகிறது. இந்த நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காமிஷ்லி நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஒரே நேரத்தில் வான்வழியாகவும், தரைவழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர்களான அபு முவுத் அல் கஹ்தானி, அபு அலா மற்றும் ரகான் வாஹித் அல் ஷம்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல்களில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.