< Back
உலக செய்திகள்
போரை அமெரிக்காதான் வழிநடத்துகிறது: ஹமாஸ் குற்றச்சாட்டு

Image Courtacy: AFP

உலக செய்திகள்

போரை அமெரிக்காதான் வழிநடத்துகிறது: ஹமாஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
23 Oct 2023 2:41 AM IST

பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை அமெரிக்கா வழிநடத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.

துனிஸ்,

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள அமெரிக்கா பல்வேறு வகைகளிலும் இஸ்ரேலுக்கு உதவி வருகிறது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு எதிரான இந்த போரை வழிநடத்துவதே அமெரிக்காதான் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீத் மெஷால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று இந்த போரை அமெரிக்கா முன்னெடுத்து செல்கிறது. அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரித்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஹமாஸ் மற்றும் காசா பகுதியை நசுக்க விரும்புகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்