< Back
உலக செய்திகள்
அமெரிக்கா - இந்தியா இடையில் வர்த்தகம் மும்மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலக செய்திகள்

அமெரிக்கா - இந்தியா இடையில் வர்த்தகம் மும்மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
1 Sept 2024 12:02 PM IST

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வாஷிங்டன்,

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றார். அந்த வகையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் முன்னிலையில் 400 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் ஆலை அமைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அமெரிக்காவில் மென்பொருள் மற்றும் கனரக தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;

"அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா - அமெரிக்கா உறவு இரு நாட்டு உறவல்ல, இது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அமெரிக்க நிறுவனங்களை புலம்பெயர் தொழிலாளர்கள் வலியுறுத்த வேண்டும். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 2ஆம் இடத்தில் உள்ளது.

இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்காவில் இருந்து நிறைய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன. வேற்றுமை எண்ணம் துளியும் இன்றி, அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்துடன் வாழுங்கள்." என்றார்.

மேலும் செய்திகள்