< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம்

கோப்புப்படம் PTI

உலக செய்திகள்

அமெரிக்காவில் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றம்

தினத்தந்தி
|
13 May 2023 3:27 AM IST

அமெரிக்க நாடாளுமன்றம் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் டைடில்-42 என்ற கொள்கையை வெளியிட்டார். அந்த கொள்கையானது பொது சுகாதார நலன் கருதி புலம் பெயர்ந்தவர்களை திருப்பி அனுப்ப அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அந்த கொள்கை சமீபத்தில் காலாவதியானது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றம் எல்லை பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டம் அமெரிக்கா-மெக்சிகோ எல்லை சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்க அனுமதிக்கிறது. மேலும் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் நபர்களை தகுதி நீக்கம் செய்வதை அதிகரிக்கவும், விண்ணப்பங்களை மின்னணு முறையில் சரிபார்க்கவும் வழிவகை செய்கிறது. இது அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்