< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த அமெரிக்க படைகள்.... ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் பிலால் அல் சுடானி கொலை
|27 Jan 2023 8:30 PM IST
வடக்கு சோமாலியாவில் அமெரிக்க துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சுடானியைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோமாலியா,
சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூத்த தலைவர் பிலால் அல் சுடானி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலியாவில் அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐ எஸ் அமைப்பின் முக்கிய பிராந்திய தலைவர் பிலால் அல்-சுடானி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு சோமாலியாவில் உள்ள மலை குகையில் அமெரிக்க துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி சுடானியைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது சூடானின் ஐஸ் குழுவைச் சேர்ந்த 10 பேர் பலியானதாகவும், அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.