< Back
உலக செய்திகள்
தென்கொரிய கடல் பகுதியில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்து
உலக செய்திகள்

தென்கொரிய கடல் பகுதியில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்து

தினத்தந்தி
|
31 Jan 2024 1:29 PM IST

தென்கொரிய கடல் பகுதியில் விழுந்து அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது.

சியோல்,

தென்கொரியாவில் அமெரிக்க விமானப்படைத்தளம் உள்ளது. இந்த தளத்தில் உள்ள விமானப்படை வீரர்கள் போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், தென்கொரியாவின் வடக்கு ஜொயலா மாகாணம் ஜிக்டோ தீவு அருகே மேற்கு பசுபிக் கடல் பகுதியில் எப்.16 ரக அமெரிக்க போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி பாரசூட் மூலம் வெளியேறி உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து அறிந்த தென்கொரிய கடற்படையினர் விரைந்து சென்று கடலில் விழுந்த விமானியை பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்