< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் சீனாவின் கொரோனா மருந்து பொருட்களுக்கு சலுகை நீட்டிப்பு
|14 May 2023 1:42 AM IST
அமெரிக்காவில் சீனாவின் கொரோனா மருந்து பொருட்களுக்கு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் கடந்த 2019-ல் சீனாவில் உருவாகி பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கொரோனாவுக்கு எதிரான மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பல நாடுகள் வழங்கியது.
அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு எதிராக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகையை அமெரிக்கா வழங்கியது. இந்த சலுகை நாளையுடன் (திங்கட்கிழமை) முடிய இருந்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 81 வகையான மருந்து பொருட்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.