< Back
உலக செய்திகள்
இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சி; சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி

Image Courtesy: AP/PTI

உலக செய்திகள்

இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சி; சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி

தினத்தந்தி
|
2 Dec 2022 6:00 PM GMT

இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் சீனாவுடனான சர்வதேச எல்லையில் இந்தியா-அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த கூட்டு ராணுவப் பயிற்சியானது, இந்தியா மற்றும் சீனா இடையேயான தீர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக சீனா கூறியது.

சீனாவின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை தரப்பில் கூறுகையில், இந்தியா எந்த நாட்டுடன் ராணுவப் பயிற்சி நடத்துகிறது, யாருடன் ராணுவப் பயிற்சி நடத்தவில்லை என்பது இந்தியாவின் உரிமை. இதை எந்த மூன்றாம் தரப்பும் முடிவு செய்ய முடியாது. எங்கள் ராணுவப் பயிற்சியில் மூன்றாம் தரப்பினர் முடிவு செய்ய அதிகாரம் இல்லை என்று கூறியது.

இந்நிலையில், இந்தியாவுடனான கூட்டு ராணுவ பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது அமெரிக்காவும் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் கூறுகையில், எங்கள் இந்திய கூட்டாளி தெரிவித்த கருத்தை நான் இங்கு மேற்கொள்காட்ட விரும்புகிறேன். இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியில் தலையிடுவது சீனாவுக்கு தேவையில்லாத வேலை' என்றார்.

மேலும் செய்திகள்