< Back
உலக செய்திகள்
அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்: யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

கோப்புப்படம்

உலக செய்திகள்

அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்: யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா

தினத்தந்தி
|
13 Jun 2023 3:35 AM IST

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.

வாஷிங்டன்,

உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நட்புறவை வளர்க்கும் பொது அமைப்பாக ஐ.நா. உள்ளது. அதன் துணை நிறுவனங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு விளங்குகிறது.

கல்வி, பண்பாடு, அறிவியல் மற்றும் தொடர்பு துறைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறது. யுனெஸ்கோ அமைப்பின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா இருந்து வந்தநிலையில் ஜனாதிபதி டிரம்ப் ஆட்சியில் விலகி கொண்டது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் ஐ.நா.வின் நிலைப்பாடு குறித்து எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை அமெரிக்கா எடுத்தது.

அப்போது இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து வெளியேறியது. மீண்டும் யுனெஸ்கோ அமைப்பில் இணைய விரும்புவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்