< Back
உலக செய்திகள்
இந்திய எல்லையில் அத்து மீறல்: சீனாவை கடுமையாக சாடிய அமெரிக்க எம்.பி
உலக செய்திகள்

இந்திய எல்லையில் அத்து மீறல்: சீனாவை கடுமையாக சாடிய அமெரிக்க எம்.பி

தினத்தந்தி
|
15 Dec 2022 2:46 AM GMT

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை அமெரிக்க எம்.பி-யான கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார்

வாஷிங்டன்,

சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் உள்ள இந்திய- சீன எல்லைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் துப்பாக்கிகள் அல்லாத பிற ஆயுதங்களுடன், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இதனை அறிந்த இந்திய படையினர், தக்க சமயத்தில் பதிலடி கொடுத்து சீன வீரர்களை பின்வாங்க வைத்தனர். இதில் இரு தரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் எல்லை பகுதியில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் தற்போது உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான சீனாவின் சமீபத்திய அத்துமீறலை இந்தியாவை சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆயுதப் படைகள் மூலம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததன் மூலம் சமீபத்திய ஆக்கிரமிப்பு சம்பவத்தை அறிந்து நான் கலக்கமடைந்துள்ளேன்.

சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்தியப் படைகளுக்கு எந்தப் பெரிய உயிரிழப்பும் ஏற்படாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ந்து வரும் போர்வெறியை, இந்தியா மற்றும் நமது பாதுகாப்புப் கூட்டாளிகளுடன் அமெரிக்கா தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை இது நினைவூட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்