< Back
உலக செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி வழங்கும் அமெரிக்கா

கோப்புப்படம் 

உலக செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி வழங்கும் அமெரிக்கா

தினத்தந்தி
|
10 Jan 2023 6:43 AM IST

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்