< Back
உலக செய்திகள்
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்; ஐ.எஸ். முக்கிய தலைவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்; ஐ.எஸ். முக்கிய தலைவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
13 July 2022 2:50 AM IST

சிரியாவின் வடமேற்கே அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். முக்கிய தலைவர் கொல்லப்பட்டு உள்ளார்.



வாஷிங்டன்,



சிரியாவின் வடமேற்கே ஜிண்டாய்ரிஸ் நகருக்கு வெளியே அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், டாப் 5 ஐ.எஸ். தலைவர்களில் ஒருவரான மற்றும் பயங்கரவாத குழுக்களின் தலைவரான மஹெர் அல்-அகால் கொல்லப்பட்டு உள்ளார்.

இதேபோன்று, நடந்த மற்றொரு தாக்குதலில், அல்-அகலுடன் நெருங்கிய தொடர்புடைய ஐ.எஸ். மூத்த அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். எனினும், இந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் யாரும் கொல்லப்படவில்லை என தொடக்க கட்ட ஆய்வு தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலால், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் தோல்வி உறுதி செய்யப்பட்டு உள்ளது என அமெரிக்க மத்திய படையினரின் செய்தி தொடர்பாளர் ஜோ பக்கினோ தெரிவித்துள்ளார்.

அல்-அகல், சிரியாவில் செயல்பட்ட பயங்கரவாத குழுவின் மூத்த தலைவராக இருந்ததுடன் மட்டுமின்றி, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு வெளியேயும் ஐ.எஸ். நெட்வொர்க் அமைப்பு வளர்ச்சி அடைவதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரின் இந்த படுகொலையால், சர்வதேச அளவில் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதற்கான பயங்கரவாத அமைப்புகளின் திறனில் இடையூறு ஏற்படும் என அமெரிக்க படை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்