< Back
உலக செய்திகள்
அமெரிக்கா: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கட்டிடத்திற்கு தீ வைத்ததில் 4 பேர் பலி

Image Courtacy: ANI

உலக செய்திகள்

அமெரிக்கா: துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கட்டிடத்திற்கு தீ வைத்ததில் 4 பேர் பலி

தினத்தந்தி
|
29 Aug 2022 5:03 AM IST

ஹூஸ்டனில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கட்டிடத்திற்கு தீ வைத்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

ஹூஸ்டன்,

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நேற்று காலை, துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவன், கட்டிடத்திற்கு தீ வைத்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர். மற்றும் மேலும் இருவர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர், சுமார் 40 வயதுடையவர் என்றும் ஹூஸ்டன் காவல்துறை அதிகாரியால் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் 8020 டன்லப் தெருவில் உள்ள பல அறைகள் கொண்ட வாடகை விடுதிக்கு தீ வைத்துள்ளார், அங்கு அவர் நீண்ட காலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு மற்றவர்கள் வெளியே வரும் வரை காத்திருந்தார் என்று காவல்துறைத் தலைவர் டிராய் பின்னர் கூறினார்.

கொல்லப்பட்ட நான்கு பேரில் சந்தேக நபரும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள், அவர்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள் என்று நம்பப்படுகிறது.

மேலும் செய்திகள்