< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - தண்ணீரைப் பீய்ச்சி அடித்து கலைத்த போலீசார்
|4 April 2023 11:10 PM IST
இலங்கை தலைநகர் கொழும்புவில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு,
இலங்கையில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும், போலியான குற்றச்சாட்டுகளின் பேரில் சில மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவதை தடுத்து நிறுத்துவதாகவும் கூறி தலைநகர் கொழும்புவில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எவ்வித காரணமும் இன்றி மாணவர்கள் சிலருக்கு பிடியாணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாணவர்களின் போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசார், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.