< Back
உலக செய்திகள்
எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
உலக செய்திகள்

எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து

தினத்தந்தி
|
3 Aug 2024 9:53 PM IST

இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது.

புதுடெல்லி,

எகிப்தின் புதிய வெளியுறவு மந்திரி பதர் அப்துலாட்டியுடன், மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் இன்று பேசினார். அப்போது, புதிய வெளியுறவு மந்திரியாக பதவியேற்று கொண்டதற்காக அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அவருடன் வருங்காலத்தில் பணியாற்றுவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் மந்திரி ஜெய்சங்கர் பதிவிட்டு உள்ளார். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது.

எல்லை கடந்த பயங்கரவாதம் கட்டுப்படுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்து உள்ளன. கொரோனா பரவலின்போது தேவையான ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி உள்ளன.

இரு நாடுகளின் ஒத்துழைப்பும் இருதரப்பு, மண்டல மற்றும் உலகளாவிய விவகாரங்களில் அரசியல் ஒத்துழைப்புடன் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விரிந்து உள்ளன.

மேலும் செய்திகள்