< Back
உலக செய்திகள்
கனடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ-6 ஆயிரம் பேர் வெளியேற்றம்
உலக செய்திகள்

கனடாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ-6 ஆயிரம் பேர் வெளியேற்றம்

தினத்தந்தி
|
16 May 2024 4:13 AM GMT

முன்னெச்சரிக்கையாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஒட்டாவா,

கனடாவின் மேற்கு மாகாணமான அல்பெர்டாவில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. காற்று வீச்சு அதிகமாக இருந்த காரணத்தால் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள காப்புக்காடுகளில் பரவி இருந்த தீயை அணைக்க போராடினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பீகன் ஹில், அபசன்ட், பிரேரி கிரீக் உள்ளிட்ட நகரில் வாழ்ந்து வரும் 6 ஆயிரம் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்குள்ள சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வெளியேறியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிலர் காயம் அடைந்தனர்.

மேலும் செய்திகள்