ஏமனில் போர்நிறுத்தத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தல்
|ஏமனில் தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
சன்னா,
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றன ஏமனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ராணுவ மோதலை தடுக்கவும், தற்போது உள்ள போர்நிறுத்தத்தை நீட்டிக்கவும் வேண்டும் என ஏமனுக்கான ஐ.நா. சபை சிறப்பு தூதர் ஹான்ஸ் கிரென்பெர்க் வலியுறுத்தியுள்ளார்.
ஏமன் தலைநகர் சன்னாவுக்கு சென்ற அவர், ஹவுதி அரசியல் கவுன்சில் தலைவரான மக்தி அல் மசாத்தை சந்தித்து, அடுத்த வாரம் காலாவதி ஆகவுள்ள போர்நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து விவாதித்தார்.
ஏமன் அரசாங்கத்திற்கும், ஹவுதி படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் 2-ந்தேதி முதல் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டு முறை போர்நிறுத்தத்திற்கான நீட்டிப்பு காலம் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஏமனில் போர் நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஏமன் நாட்டின் போரிடும் தரப்புகள் மற்றும் பிராந்திய வல்லரசுகளை ஐ.நா. வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.