< Back
உலக செய்திகள்
நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு உணவு நிவாரணம் நிறுத்தம் - ஐ.நா. தகவல்
உலக செய்திகள்

நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு உணவு நிவாரணம் நிறுத்தம் - ஐ.நா. தகவல்

தினத்தந்தி
|
15 Jun 2022 10:47 AM GMT

உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டால், தெற்கு சூடானில் சுமார் 17 லட்சம் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டோம்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாக உள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்களாகவும் உள்ளனர். அங்குள்ள மக்களுக்கான உணவு தேவைக்காக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு சார்பில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் நிதிப்பிரச்சினை காரணமாக தெற்கு சூடானுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உணவு நிவாரணப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் போர், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவு நிவாரணம் நிறுத்தப்படுவதாக ஐ.நா. கூறியுள்ளது.

இருப்பினும் ஐ.நா.வின் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டால், தெற்கு சூடானில் சுமார் 17 லட்சம் மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்