இங்கிலாந்தின் புதிய பிரதமர் அமெரிக்கா, உக்ரைன் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை
|இங்கிலாந்தின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ், அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மேலும் ரஷியா அதிபர் புதின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, இங்கிலாந்து முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்தார்.