< Back
உலக செய்திகள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உக்ரைன் வீரர் ரஷியாவுக்கு எதிரான போரில் மரணம்
உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உக்ரைன் வீரர் ரஷியாவுக்கு எதிரான போரில் மரணம்

தினத்தந்தி
|
27 March 2023 10:48 PM IST

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உக்ரைனின் குத்துச்சண்டை வீரர் ரஷியாவுக்கு எதிரான போரில் பங்கேற்று மரணம் அடைந்து உள்ளார்.



கீவ்,


உக்ரைனை சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீரர் மேக்சிம் காலினிச்சேவ் (வயது 22). 2018-ம் ஆண்டு பியூனோஸ் அயர்சில் நடந்த கோடை கால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் 56 கிலோவுக்கு உட்பட்ட எடை பிரிவில், விளையாடி நாட்டுக்காக வெள்ளி பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர்.

தொடர்ந்து, அதே ஆண்டில் ஐரோப்பிய இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதத்தில் உக்ரைன் சார்பில் பங்கேற்றார். நாட்டின் வெற்றிக்கு உதவுவதில் கவனம் செலுத்தினார்.

இதனால், கடந்த ஆண்டு ஆர்மீனியாவில் நடந்த ஆடவர் ஐரோப்பிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் கூட பங்கேற்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், தொடர்ந்து போரில் பங்கேற்ற நிலையிலேயே, மேக்சிம் மரணம் அடைந்து விட்டார். உக்ரைன் நாடு விடுதலை அடைவதற்காக போராடிய நிலையிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்த விவரம் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்