< Back
உலக செய்திகள்
ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்து வினியோகத்தை ரஷியா தடுக்கிறது; உக்ரைன் சுகாதார மந்திரி குற்றச்சாட்டு
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு பகுதிகளில் மருந்து வினியோகத்தை ரஷியா தடுக்கிறது; உக்ரைன் சுகாதார மந்திரி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
14 Aug 2022 3:02 AM IST

ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷியா தடுப்பதாக உக்ரைனின் சுகாதார மந்திரி விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 6-வது மாதத்தை நெருங்கி வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. ரஷிய கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நகரங்களில் மனித உரிமைகள் மீறல்கள் நடப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை கிடைக்கவிடாமல் ரஷியா தடுப்பதாக உக்ரைனின் சுகாதார மந்திரி விக்டர் லியாஷ்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில், "6 மாத காலப் போரில், ரஷியா சரியான மனிதாபிமான வழித்தடங்களை அனுமதிக்கவில்லை. அந்த வழித்தடங்கள் மூலம் தேவைப்படும் நோயாளிகளுக்கு எங்களால் மருந்துகளை வழங்க முடியும். இந்த நடவடிக்கைகள் ரஷியாவால் உள்நோக்கத்துடன் எடுக்கப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அவை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என்று நாங்கள் கருதுகிறோம். அவை ஆவணப்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என கூறினார்.

மேலும் செய்திகள்