< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உக்ரைனின் இராணுவ வளங்கள் "கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன" கூறும் ரஷியா
|16 Aug 2023 12:56 AM IST
மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் செர்ஜி ஷோய்கு இதனை தெரிவித்தார்.
மாஸ்கோ,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையினால போர் ஒன்றரை ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. போரினால், இதுவரை பலர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனின் இராணுவ வளங்கள் "கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டன என்று ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். போர்களின் ஆரம்ப முடிவுகள் உக்ரைனின் இராணுவ வளங்கள் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதைக் காட்டுகின்றன என்று என்று அவர் கூறினார்.
மாஸ்கோவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் செர்ஜி ஷோய்கு இதனை தெரிவித்தார்.