< Back
உலக செய்திகள்
தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்:  உக்ரைன் போர் குறித்து பேசிய போது கண்ணீர் விட்டு அழுத போப்!
உலக செய்திகள்

தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: உக்ரைன் போர் குறித்து பேசிய போது கண்ணீர் விட்டு அழுத போப்!

தினத்தந்தி
|
10 Dec 2022 3:13 PM IST

உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ரோம்,

கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார்.

தனது உரையின் நடுவில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதை தொடர்ந்து, உரையாற்றிய போப்,

உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும் போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைக்கண்ட போப்பின் அருகில் இருந்த ரோம் மேயர் ராபர்டோ குவால்டியேரி உள்ளிட்ட கூட்டம், அவரால் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து, அவரைத் தேற்றினர். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

அப்போது அவர், "மாசற்ற கன்னியே, இன்று நான் உக்ரைன் மக்களின் நிலையை உங்களிடம் கொண்டு வர விரும்பினேன். உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களது வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.

இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் மக்கள் படும் துன்மத்தை கண்டு போப் வருந்தும் காட்சி பார்க்கும் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்