< Back
உலக செய்திகள்
கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு
உலக செய்திகள்

கனடா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - விமான நிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்பு

தினத்தந்தி
|
22 Sep 2023 5:20 PM GMT

அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஒட்டாவா,

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா ஆகியோரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று வரவேற்றார்.

ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக ஜெலன்ஸ்கி கனடா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது கனடா பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஜெலன்ஸ்கி, அந்நாட்டின் நாடாளுமன்றத்திலும் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்