< Back
உலக செய்திகள்
ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது - விமானப்படை தகவல்

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது - விமானப்படை தகவல்

தினத்தந்தி
|
28 Oct 2022 10:31 PM IST

ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கீவ்,

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் இதுவரை ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஈரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெட்-136 காமிகேஸ் டிரோன்களை கீவ் வீழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான அறிவிப்பில், "ரஷியாவுடனான 6 மாதங்களுக்கு மேலான போரில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஈரானில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளோம். இந்த ஆளில்லா விமானங்கள் ரஷியாவுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்கள் உதவியுள்ளன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டிரோன்களை ரஷியாவுக்கு தங்கள் நாடு ஏற்றுமதி செய்கிறது என்ற குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

உக்ரைன் பலமுறை வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதற்கு சர்வதேச நாடுகளின் உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளது, இதனால் ரஷியா அதன் மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்