< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஏடன் வளைகுடாவில் ஹவுதிகளால் தாக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மூழ்கியது
|19 Feb 2024 4:38 PM IST
இந்த கப்பலில் இருந்தவர்கள் ஹவுதி தாக்குதலால் கப்பலை கைவிட்டனர்.
சனா,
செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஹவுதி குழுவின் ராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரியா இன்று தெரிவித்தார்.
முன்னதாக, செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இருந்தவர்கள் தாக்குதல் ஏற்பட்டவுடன் கப்பலைக் கைவிட்டதால் தற்போது இந்த கப்பல் பெரும் சேதம் அடைந்து மூழ்கியதாக யாஹ்யா சரியா தெரிவித்துள்ளார்.