< Back
உலக செய்திகள்
8 மாதங்களில் 2 முறை என்னை கொல்ல முயற்சி எலான் மஸ்க் சொல்கிறார்
உலக செய்திகள்

'8 மாதங்களில் 2 முறை என்னை கொல்ல முயற்சி' எலான் மஸ்க் சொல்கிறார்

தினத்தந்தி
|
15 July 2024 8:44 AM IST

கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பை துப்பாக்கியால் சுட்டதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். இந்த கொலை முயற்சி சம்பவம் அமெரிக்கா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த 8 மாதங்களில் 2 முறை தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆபத்தான காலம் வரும். கடந்த 8 மாதங்களில் 2 முறை என்னை கொல்வதற்கு முயற்சி நடந்துள்ளது. 2 பேர் தனித்தனி சந்தர்ப்பங்களில் என்னை கொலை செய்ய முயன்றனர். டெக்சாசில் உள்ள டெஸ்லா தலைமையகத்துக்கு அருகில் அவர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்