< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஒரே மாதிரி தோற்றம் கொண்ட 2 பேர்: விமானத்தில் சந்தித்த போது ஏற்பட்ட சுவாரஸ்யம்
|10 March 2024 6:07 PM IST
ஒருவருக்கு ஒருவர் துளியும் சம்பந்தமில்லாத இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டன்,
இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டிருப்போம். எல்லோருக்கும் நம்மைப் போன்றே உருவம்கொண்ட மீதமுள்ள ஆறு பேரில் ஒருவரையாவது பார்க்க வேண்டும் என ஆசை இருக்கும். அப்படி ஒரே மாதிரி தோற்றம் கொண்ட, ஒருவருக்கு ஒருவர் துளியும் சம்பந்தமில்லாத இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
லண்டனில் இருந்து பாங்காக் சென்ற விமானத்தில் அச்சு அசலாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட 2 பேர் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்ட சுவாரஸ்யம் நடந்துள்ளது.
இருவரின் பெயரும் மார்க் கார்லாண்ட் என தெரியவந்தபோது மேலும் சுவாரஸ்யம் கூடிப்போனது. இருவரும் ஒரே நபர் என நினைத்து விமான பணியாளர்களும் சற்று குழம்பி போயினர். ஒருவருக்கு 58 வயது. மற்றொருவருக்கு 62 வயது என தெரிய வந்த பின்னரே குழப்பம் தீர்ந்து உள்ளது.