< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது
உலக செய்திகள்

அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது

தினத்தந்தி
|
18 April 2024 5:12 PM IST

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் படித்து வரும் இந்திய மாணவிகள் 2 பேர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை எடுத்துவிட்டு பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

வாஷிங்டன்,

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச்சேர்ந்த 22 வயது மாணவியும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் ஹோபோக்கன் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்தனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது நிரூபணம் ஆகி உள்ளதால் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்