< Back
உலக செய்திகள்
படப்பிடிப்பிற்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்து ; 2 நடிகர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்
உலக செய்திகள்

படப்பிடிப்பிற்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்து ; 2 நடிகர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
19 Jun 2022 3:58 AM IST

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 நடிகர்கள் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள் உள்ளனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருட கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்கள், தொடர்களை பார்த்து வருகின்றனர்.

பயனாளர்களுக்கு மாதம் அல்லது ஆண்டு கணக்கில் சந்தா தொகை அடிப்படையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் திரைபடங்கள், தொடர்களை ஒளிப்பரப்பி வருகிறது.

இதனிடையே, நெட்பிளிக்ஸ் தளத்தில் 'தி ஜோசன் ஒன்ஸ்' என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ.

இந்நிலையியில், ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ மற்றும் சில நடிகர், நடிகைகள் நெட்பிளிக்ஸ் தொடர் படப்பிடிப்பிற்காக மெக்சிகோ நாட்டின் முலிஜி நகருக்கு சென்றனர்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் ஒரு வேனில் வந்துகொண்டிருந்தனர். பஜா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த படக்குழுவினர் 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்