< Back
உலக செய்திகள்
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மாயம் - தேடும் பணி தீவிரம்
உலக செய்திகள்

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மாயம் - தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
14 July 2024 5:27 PM IST

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்தனர்.

நோம் பென்,

கம்போடியா நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஹெலிகாப்டரில் 2 வீரர்கள் பயணித்தனர்.

அந்நாட்டின் பர்சட் , ஹட் காங் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள கர்டமன் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹெலிகாப்டரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2 வீரர்களுடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்