< Back
உலக செய்திகள்
துருக்கி; சாலையோர பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... 12 பயணிகள் பலி
உலக செய்திகள்

துருக்கி; சாலையோர பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து... 12 பயணிகள் பலி

தினத்தந்தி
|
22 Aug 2023 12:50 PM IST

சாலையோர பள்ளதாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்காரா,

மத்திய துருக்கி நகரமான யோஸ்காட் பகுதியில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. யோஸ்காட் பிரதான சாலையில் சிவாஸ் நகரில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்தான்புல் நகருக்கு பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையிலிருந்து விலகி சாலையோர பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மேலும் 19 பயணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பஸ் டிரைவரின் கவன குறைவால் விபத்து எற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும் செய்திகள்