< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிரியா மீது துருக்கி வான்வழி தாக்குதல் - கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி
|12 Aug 2023 3:53 AM IST
சிரியாவில் இருந்தவாறு குர்திஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அங்காரா,
சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் இருந்தவாறு துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளகளை துருக்கி பயங்கவாதிகளாக கருதுகிறது. மேலும், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவின் வடக்குப்பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.