< Back
உலக செய்திகள்
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய துருக்கி அரசு சம்மதம்

தினத்தந்தி
|
8 July 2023 8:47 PM IST

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் இணைய துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்தார்.

அங்காரா,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை நீடித்து வரும் இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.

இதனிடையே உக்ரைன் ராணுவத்திற்கு மேலும் ராணுவ உதவிகளை கேட்பதற்காக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் துருக்கி சென்ற அவரை, அந்நாட்டு அதிபர் எர்டோகன் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் நேட்டோ படையில் இணைய எர்டோகன் சம்மதம் தெரிவித்தார். அதோடு நேட்டோவில் இணைய உக்ரைன் தகுதியான நாடு எனவும் அவர் கூறினார்.

உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இருநாடுகளிடமும் துருக்கி நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தராக இருக்க உதவியாக இருக்கிறது. சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணையாமல் நடுநிலை வகித்து வந்தன. ஆனால் உக்ரைன் போரைத் தொடர்ந்து, தற்போது தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளன.

மேலும் செய்திகள்