< Back
உலக செய்திகள்
2024 தேர்தலில் போட்டியா? அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு...!

Image Courtesy: AFP

உலக செய்திகள்

2024 தேர்தலில் போட்டியா? அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு...!

தினத்தந்தி
|
4 Nov 2022 1:21 PM IST

2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியா? என்பது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துள்ளார்.

வாஷிங்டன்,

2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டொனால்டு டிரம்ப். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை, 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன.

இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று நடந்த நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய டிரம்ப், நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றிபெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் நான் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன்.

அமெரிக்க வரலாற்றில் பதவில் இருந்த அதிபர் அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. போதும் நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன்... தயாராக இருங்கள்' என்றார்.

மேலும் செய்திகள்