< Back
உலக செய்திகள்
பஸ் நிறுத்தத்திற்குள் புகுந்த லாரி - வீட்டிற்கு செல்ல காத்திருந்த பள்ளிக்குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
உலக செய்திகள்

பஸ் நிறுத்தத்திற்குள் புகுந்த லாரி - வீட்டிற்கு செல்ல காத்திருந்த பள்ளிக்குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

தினத்தந்தி
|
31 Aug 2022 1:49 PM IST

பஸ் நிறுத்தம் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல காத்திருந்த குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.

ஜகர்தா,

இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் உள்ள பிகசி நகரில் ஆரம்பப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் நேற்று வகுப்பை முடித்துவிட்டு வெளியே வந்த பள்ளிக்குழந்தைகள் 20 பேர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர். குழந்தைகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரி பள்ளிக்குழந்தைகள் நின்றுகொண்டிருந்த பஸ் நிறுத்தம் மீது வேகமாக மோதியது. பின்னர் அங்கிருந்த மின் கம்பம் மீது லாரி மோதியது. அதில், மின் கம்பம் சரிந்து விழுந்து சாலையில் வந்துகொண்டிருந்த வேன் மீது விழுந்தது.

இந்த கோர விபத்தில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மின் கம்பம் விழுந்ததில் வேன் டிரைவரும் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த பள்ளிக்குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்