< Back
உலக செய்திகள்
ஜெர்மனி: ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி 3 பேர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

ஜெர்மனி: ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதி 3 பேர் பலி

தினத்தந்தி
|
24 April 2023 1:36 AM IST

ஜெர்மனியில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

பெர்லின்,

ஜெர்மனியில் ஹன்னோவர் நகரில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற கார் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்த நிலையில் அதில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

அந்த காரில் ஓட்டுநர் மற்றும் 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களும் பலியாகினர். ரெயிலில் 38 பயணிகளும் நான்கு ரெயில்வே ஊழியர்களும் இருந்தனர், மேலும் ஒருவர் லேசான காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்