'குவாண்டம்' செய்திகளை கண்காணிப்பது வேற்றுகிரகவாசிகளைக் கண்டறிய உதவும் - ஆய்வில் தகவல்
|குவாண்டம் செய்திகளை வேற்றுகிரகவாசிகள் பூமியுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.
வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் பல நாடுகள் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளன. வேற்றுகிரக வாசிகள் போன்ற மர்ம உருவம். பறக்கும் தட்டு போன்றவை குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம்.
அதுமட்டுமின்றி சமீப காலங்களில், எந்தவொரு தகவலையும் கொண்டு செல்வதற்கு குவாண்டம் துகள்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் பற்றிய பல ஆய்வுகள் உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபோட்டான்கள் என்றும் அழைக்கப்படும் ஒளியின் துகள்கள் அவற்றின் "குவாண்டம்" தன்மையை இழக்காமல் நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரங்களுக்கு அனுப்பப்படலாம் என்றும் இந்த வகையான செய்திகளை வேற்றுகிரகவாசிகள் பூமியுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம் என்றும் புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனால் குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாகும் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
இது குறித்து ஆராய்ச்சிக் கட்டுரையில் கோட்பாட்டு இயற்பியலாளர் அர்ஜுன் பெரேரா கூறுகையில், புத்திசாலித்தனமான வேற்றுகிரகவாசிகள் குவாண்டம் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதற்கு அதிக சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.