டிரம்ப் எஸ்டேட்டில் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது - எஃப்பிஐ
|டிரம்ப் எஸ்டேட்டில் இருந்து மிகவும் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சொந்தமான பிளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ எஸ்டேட்டில் கடந்த திங்கட்கிழமை எஃப்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரகசிய ஆவணங்களை கைப்பற்றியதாக எஃப்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை தொடர்பாகவும், சோதனைக்கான வாரண்ட், சோதனையில் கைப்பற்றப்பட்டவரை குறித்த விவரங்களை எஃப்பிஐ சீலிட்ட கவரில் கோர்ட்டில் தாக்கல் செய்தது.
அந்த சீலிட்ட கவரை பிரிக்க நீதித்துறை அனுமதியளித்ததை தொடர்ந்து புளோரிடா நீதிபதி அந்த வாரண்ட் மற்றும் அது தொடர்பான தகவல்கள் அடங்கிய கவரை பிரித்தார்.
அதில், சோதனையின்போது அரசு கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பிரான்ஸ் அதிபர் குறித்த தகவல்களும் கைப்பற்றப்பட்டதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.