< Back
உலக செய்திகள்
ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி
உலக செய்திகள்

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி

தினத்தந்தி
|
13 Oct 2023 7:27 AM IST

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.

மாஸ்கோ,

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 20 மாதங்களை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் சமீபகாலமாக இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதலை நடத்துகின்றன. அதன்படி ரஷியாவின் பெல்கோரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

எனினும் இந்த டிரோன் தாக்குதலில் பெல்கோரோட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட பகுதியில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்